கஸல்
யார்தான் மறுக்கக் கூடும்?
பறிபோகத்தான் செய்யும்
இதயம் என்றொன்று இருந்தால்
பழிச்சொல்லுக்கு ஆளாகத் துணிந்த காதல்
பைத்தியமாக்கிற்று அவள்மேல் என்னை
குஞ்சுகளை பேணி வளர்ப்பது
கடமையாகலாம் கோழிக்கு
ஆனால் பசிக்கு பாவமில்லை என
நியாயம் கோருகிறது பருந்து
தர்க்க நியாயம் எதிர்கொள்ளுமா
இதயத்தின் வலியை
முன்னமே எச்சரிக்கவில்லை ஏன் எவரும்
பாதகர்களே…
பழமொழியை உயர்த்திப் பிடிக்கவா
கண்ணீர்க்கரையில் கால் நனைக்கிறீர்..?
பலிப்பது உண்மையானால்
சபிக்கிறேன் நான்
மனிதர் நோக
பார்த்த மனிதர்க்கெல்லாம்
காதல் வந்து கடவுக…
💬 கருத்துகள் (0)