ஆசானின் சுட்டு விரல்
விரல்களில் சிறியது
விளைவுகளில் பெரியது!
வழியினைச் சுட்டியது
வாழ்வினை வடித்தது!
எழுத்தினைச் சுட்டியது!
எண்ணத்தை வளர்த்தது!
தவறினைச் சுட்டியது!
தர்மத்தை கற்றது!
இருளினை விலக்கி,
அறிவொளி ஏற்றியது!
வீழ்ந்திடும் வேளையில்,
வெற்றியை ஊட்டியது!
“கற்க” என்று சொல்லி,
கனவுகளை விதைத்தது;
“முயல்க” என்று சொல்லி,
முடியாததை முடித்தது!
கரும்பலகை முன்நின்று
காலத்தைச் செதுக்கியது;
சிறு சிறு உள்ளங்களை
சிற்பமாய் வடித்தது!
ஆசானின் சுட்டுவிரல்
பாதையை மட்டும் காட்டவில்லை!
எங்கள் பயணத்தின்
புதிய திசையை காட்டியது!
இன்று எங்கள் உயர்வில்
உங்கள் உழைப்பு தெரிகிறது!
எங்கள் ஒவ்வோர் வெற்றியிலும்
உங்கள் விழிகள் மலர்கிறது!
சுட்டிய விரலுக்கு
சொல்லென்ன நன்றியோ?
வாழ்வை வடித்த ஆசானுக்கு
வாழ்நாள் முழுதும் வணக்கமோ!
ஒரு விரல் எழுத்தைச் சுட்டும்!
ஒரு ஆசான் வாழ்க்கையைச் சுட்டுவார்!
💬 கருத்துகள் (0)