ஆத்தா மாரியம்மா …….
மும்மாரி பொழிய
வேணும்னு
முத்துமாரியம்மனுக்கு
மூணு தாவா கம்பு குத்தி
மூணு பானை வழிய
மூணு வேளையும் கூழ் ஊத்தி
பொங்க வச்சேன்
மூணு நாளா படுத்த
படுக்கையாய் கிடக்கும் ஆத்தாவுக்கு
தூக்கு வாளியில கறிசோறு போக
கடைசி நாளான நேத்து
பாடையில அம்மாவின் உயிர் போக
கோழி குஞ்சு ஒன்றை கட்டி
ஆத்தாவுக்கு துணையாக அனுப்ப
அரை டவுசரே அழுது
புலம்பிக் கிடக்கும்
எனக்கே இப்பொழுது வயசோ
ஆறு பசியோ நூறு
நா வெறுக்க வெறுக்க பாக்க
கண்ணுக்கு
தெரியிரதெல்லாம் பால் குடித்த
ஆத்தாவின்
முளை காம்பு இரண்டு ,
ச. சக்தி
💬 கருத்துகள் (0)