அவள் முகம்
இறைவனின் இசையே
கம்பனின் கவியே..!
கண்களால் காதலை திருடும்
காதல் திருடியே நீதானடி..!
பிறை போன்றது உனது முகமே..!
யாருக்கும் கிடைக்காத அழகின் வரமே!
உதிக்கும் சூரியனும் உன் உதட்டை
பார்த்தால் வெக்கத்தில் மறைந்தே
போகுமே…!
முடியும் இரவும் உன் முகத்தை
பார்க்கவே பகலை வெறுக்குமே..!
வார்த்தையால் வர்ணிக்க முடியாத அழகடி
உனது முகம்..!
எத்தனை சொன்னாலும்
தீராதடி எனது காதல் தாகம்..!
நீதானே என் உயிரின் மறுபாகம்..!
💬 கருத்துகள் (0)