உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

என்னை உருவாக்கிய சிற்பிக்கு

என் ஆசிரியருக்கு!

பாடம் சொல்ல வந்தவர் நீங்கள்,
வாழ்க்கையை புரிய வைத்தவர் நீங்கள்!

எழுத்துக்களை மட்டும் கற்றுத்தராமல்,
என் எண்ணத்திற்கு வடிவம் தீட்டிய மகான் நீங்கள்!

தவறு செய்தபோது கண்டித்தீர்கள்,
தடுமாறிய போது கை கொடுத்தீர்கள்,
தோல்வி வந்தால் பயப்படாதே என்றும் வெற்றி வந்தால் தலைக்கனம் கொள்ளாதே என்றீர்கள்!

என்னால் முடியாதோ என என்னை நானே சந்தேகித்தேன்,
உன்னால் முடியும் என என்னை நம்பினீர்கள்!

நல்ல மதிப்பெண்களை விட ஒரு நல்ல மனிதனாக இருப்பதே முக்கியம் என்றீர்கள்!

உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் அன்று அறிவுரை, இன்று அது வாழ்க்கைப் பாடம் !

கரும்பலகையில் எழுதும் எழுத்துக்களை மறந்தாலும்,
என் மனதில் எழுதிய வார்த்தைகளை என்றும் மறக்க முடியாது, ஏனென்றால், அவை உங்களின் வார்த்தைகள்!

என் கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்தது நீங்கள், அந்த அன்பான கைகள் நீங்கள் மட்டுமே!

என் பயத்தை தைரியமாக மாற்றியது நீங்கள், அந்த நம்பிக்கையும் நீங்கள்!

என் பாதையில் ஒளியாக நின்ற என் ஆசிரியரே,

நான் இன்று இருக்கும் நிலைக்கு உங்கள் வழிகாட்டுதலே காரணம்!

நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் உங்களின் அன்புக்கு போதாது!

என் வாழ்வில் நான் உயரும்போதெல்லாம் அதன் பின்னால் உங்கள் அறிவுரையே இருக்கும்!

என்னை உருவாக்கிய சிற்பிக்கு என் மனமார்ந்த நன்றி!

👁 11 வாசிப்பு ☰ 21 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.