இப்பொழுதே பேசிவிடு
தகவல் தொடர்பு
வசதிகள் பெருகித்தான்விட்டன.
இருப்பினும் நெருக்கமானவர்களோடு
தொடர்பு கொண்டு
பேச நேரம்தான் இருப்பதில்லை.
வந்த அழைப்புகளை
ஏற்றுப் பேச நேரமில்லாமல் புறக்கணிக்கிறோம்.
சில நேரங்களில்
நாம் நினைத்தாலும்
தொடர்பு கொள்ள முடியாத
எல்லைக்கு
அவர்களை
எடுத்துச் சென்று விடுகிறது
காலம்…
அதனால்
இருப்போரிடம்
தொடர்பு கொண்டு
இப்பொழுதே பேசிவிடு…
💬 கருத்துகள் (0)