கவனச்சிதறல்
கழனிகள் சூழ்ந்த ஊர்களைச் சுற்றியே
இன்றைய பொழுது வட்டமடிக்கிறது.
கவனச்சிதறல் காட்சிகளை
ஒழுங்கின்றி கலைத்துப் போடுகிறது.
நான் இல்லாத அங்கே…
ஜெயராஜ் அண்ணன்
மங்குஸ்தான் பழங்களை
வாங்கிக்கொண்டிருக்கலாம்.
ஜீவா அண்ணன்
பொதுக்கூட்டத்திற்கான தயாரிப்புகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்.
துர்க்கா அண்ணன்
ஓவியங்களுக்கான வண்ணங்களைக்
கலந்துக்கொண்டிருக்கலாம்.
ராஜேந்திரன் அண்ணன்
சாலைக்கரைசாமி இடிப்பு குறித்து
கதைத்துக்கொண்டிருக்கலாம்.
முருகன் அண்ணன்
செவ்வாழை அண்டிகளைத்
தோண்டிக்கொண்டிருக்கலாம்.
அவர்கள் இல்லாத இங்கே…
தேர்வறைக் கண்காணிப்பாளராக சுற்றி வருகிறேன்.
எந்தக் காட்சியும் கவனத்தில் படிய மறுக்கிறது.
கலைந்து கிடக்கும் காகித இணைப்பு நூல்களை
அமுததாரணியின் விரல்கள் ஒழுங்குபடுத்தும் காட்சி
அன்னிச்சையாக மூளை நரம்புகளில் படிந்துவிடுகின்றது.
அருமை