உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மகாத்மாவின் மூவகைத் தத்துவம்

மனிதத் தேகமும் தாகமும் கொண்டதால்
மாபெரும் நிலையைப் பெற்றாயோ!
தேசத் தந்தை எனப் பெரும் பட்டமாய்
சாகும் வரை மாறாத அகிம்சை வழியும்
உன் அடையாளமாய் ஆனதோ!

குரங்கில் இருந்து மனிதன் வந்தான்
அந்தக் குரங்கு போன்றே மனமும் தாவும்!
தாவித் திரியும் மனதை அடக்கவே
மூன்று குரங்கின் தத்துவம் தந்தாய்!

தீயவைகளை என்றென்றும் பார்க்காதே
தீமையைப் பார்க்கும் போது மனமும்
தீய செயலுக்கு அடிமையாகி விடுமே!
தீயைப் போன்ற சுடர்மிகு கருத்தும் இதுதானே!
முதல் குரங்கு கண்ணை மூடித் தந்தது முதல் பாடம்.

தீயவைகளை எப்போதும் பேசாதே
எதை நினைக்கிறாயோ அதுவாகவே
மாறுவாய் என்றார் பாரதியார்
தீய சொற்களைப் பேசுவதால் தீமையே விளைவிக்கும்
இரண்டாம் குரங்கு வாய் மூடித் தந்தது
இரண்டாவது வாழ்க்கைப் பாடம்!

தீயவைகளை ஒருபோதும் கேட்காதே!
எதிர்மறை (தீய) எண்ணங்கள் செவிகளில்
புகுந்தால்
நல் மனதின் அமைதி சீர்குலைந்து போகும்
தீயன பார்க்காமல் பேசாமல் கேட்காமல்
மனித குலத்திற்கு மூன்றாவது வாழ்க்கைப்
பாடத்தைக் கற்றுத் தந்தது!

தீயவைகளைப் பார்ப்பதால் கேட்பதால்
பேசுவதால்!
அறிவின் உச்சகட்டம் அழிந்தொழியும்
என்பதால் புலன்கள் மூன்றையும்
தடுத்தாய்

உம் வார்த்தைகள் என்றென்றுமே!
தலைமுறை தலைமுறையாகத்
தரணியில் தழைத்தோங்கும்!
தாய் அன்புடன் கூடிய அறிவுரையை
எமக்கும் உம் வழித்தோன்றலான
நாளைய சமுதாயத்திற்கும் வழங்கிச்
சென்றாய்!

நன்றி.
வந்தே மாதரம்

— பாரதியின் மகள்
ச. அனிதா, MA, MEd.
முதுநிலை பட்டதாரி ஆசிரியை,
விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் இடைநிலைப் பொதுப் பள்ளி,
மணம்பூண்டி – 605759.

👁 14 வாசிப்பு ☰ 46 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.