உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

ஒரு குரங்கு விழிகளுக்கு
வெள்ளித்திரை இழுத்தது;
தீமையின் காட்சிகள்
அதன் கனவிலும் விழாதிருக்க …

இன்னொரு குரங்கு செவிகளுக்கு ‌‌
மௌனத்தின் சங்கு ஊதியது ;
தீச்சொற்களின் நஞ்சு அதன் உள்ளத்தில் கலந்துவிடாதிருக்க …

மூன்றாவது குரங்கு உதடுகளுக்கு அறத்தின் முத்திரை பதித்தது; பொய்யின் ஒரு துளியும் உலகில் விழாதிருக்க….

மூன்று குரங்குகள் சிற்பியின் கைகளில் சிறு உருவங்கள் ஆனால் காந்தியின் சிந்தனையில் பெரும் பிரகடனங்கள்

கண் =ஒரு காவல்,
செவி= ஒரு தேர்வு,
நாவு = ஒரு நாணயம், மூன்றும் காக்கப்பட்டால் மனிதம் களங்கமின்றி நிற்கும்

முகத்தின் ஒளிவிளக்காய்,
அடக்கத்தின் அருங்கலனாய், வாய்மையின் வைரமணியாய், பார்வையில் பண்பு மலர,
பேச்சில் பாங்கு பிறக்க, கேள்வியில் கட்டுப்பாடு நிலைக்க,
*மூன்றும் இனைந்திடும் வேளையில், மனிதத்தின் மகுடம் மலர்ந்திடும்!*

விழி உரைத்தது =”தேர்ந்தெடு”.
கேள்வி உரைத்தது =”சிந்தித்துக் கேள்.” மொழி உரைத்தது =”உண்மை பேசு”
இந்த உரை மனிதப் பாதையை ஒளிரச் செய்தன

மூடிய கண்களுக்கு மனச்சாட்சியின் வெளிச்சம்.
மூடிய செவிகளுக்கு நீதியின் நாநம்.
மூடிய உதடுகளுக்கு வாய்மையின் வேள்வி. மூன்று குரங்குகள் அல்ல அவை மூன்று அரங்களின் அடையாளம், மௌனமாய் நின்ற அந்த சிலை, மனிதம் பேசும் வரலாறானது!
நன்றி!… 😊

👁 10 வாசிப்பு ☰ 23 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.