மூன்று குரங்குகள்
பார்த்திடு : அன்பை விதைத்து ஆனந்தம் கொண்டிடு ஒற்றுமை வழியில் உலகை வென்றிடு இல்லற மேன்மையில் நல்லறம் உணர்த்திடு புரவலர் புகழில் இரவலர் காத்திடு
கேட்டிடு : செந்தமிழ் வளமதை செவியுணரக் கேட்டிடு மூத்தோர் சொல்லை பெயலாய் ஏற்றிடு கற்றோர் கருத்தினை நன்மையெனக் கருதிடு களவையும் கற்பையும் கனலாய் போற்றிடு
பேசிடு : இன்சொல் நவின்று இனிமை பெருக்கிடு நட்பின் பரவலில் பகைமை தவிர்த்திடு பாசப் பங்கில் நடுநிலை கொண்டிடு மரபு தழுவலில் மாநிலம் வென்றிடு
வளர்த்திடு : பகைமை வென்று ஒற்றுமை வளர்த்திடு அறவோர் கூற்றை அறமென்று உணர்ந்திடு வறியவர் இன்னலை பனியாய் உருக்கிடு ஐம்புலன் அடக்கி பண்பை விதைத்திடு
புறச்சொல் புல்லரை கற்பித்து அடக்கிடு இருமனப் பெண்டிரை இயல்பாய் ஒதுக்கிடு தீமை என்றிடின் தீர்க்கமாய் போரிடு தனித்துவ இகழ்வை திறமையாய் தகர்த்திடு.
💬 கருத்துகள் (0)