மூன்று குரங்குகள்
மூன்று குரங்குகள்
மகாத்மா காந்தியின் அறிவுரை கூறும்
மூன்று குரங்குகள் மக்களுக்கு இயம்பும்
நல்லதை பேசு , நல்லதை பார்
நல்லதை கேள், கூறியது பாருக்கு
காந்தி வழி அகிம்சை வழி
எளிமையை போற்றி நடந்தார் அவ்வழி
பொன்,பொருள், பெண் ஆசையை துறந்தார்
மதுரையிலே பகட்டான ஆடையை துறந்தார்
மதங்கள் அனைத்தும் சமம் என்றார்
வன்முறையை விடுத்து அமைதி வழி நின்றார்
இறைவனால் படைக்கப்பட்டது இவ்வுலகம் என்பார்
நல்லதை செய்வதற்குத்தான் மக்கள் வாழ்கிறான்
அன்பு,அறிவு,அகிம்சை போற்றினர்
அதனால் காந்தியை உலகமே போற்றியது
அவர் எப்போதும் விரும்புவது வேடிக்கை
மக்களை அரவணைப்பது அவர் வாடிக்கை
தமிழ் மொழியை அமிழ்தினும் இனிது என்பார்
உலகில் போரின்றி சமாதானம் வேண்டும் என்பார்
உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைக்கும்
காந்தி மகாத்மா புகழ் வாழ்க வாழ்கவே
கவிஞர் லலிதா ஷ்யாம்
மதுரை
கைப்பேசி : 9843260454
💬 கருத்துகள் (0)