மூன்று குரங்குகள்
ஆசிரியரான மூன்று
முன்பதிவுகள்!!
முத்தமிழாய் பரிசுகிட்டியவழியில்
மூன்று குரங்கு பொம்மைகளின்
சைகைபடி வாழ்ந்திருந்து காந்தி
செயல்வீரராகி மகாத்மாவாகினார்.
முக்கூடலாய் நன்றின் வாழ்வியலுக்கு
மூவேந்தரென
காந்திக்கு மட்டுமின்றி
தேசத்தந்தை யின் பற்றாளர்கட்கும்
நீதிமன்ற தலைமை களானது மூதாதிய உருவங்கள்.
முப்பரிமாண ம் காட்டும்மனித முன்னவர்
முனைப்பாய் தீதுகாணாதும்,கேளாதும்
பேசாதும் கொள்ளச்சுட்டினாலும்-அறப்
பண்பெனில் தீயதைகண்டு களைவதே.
புதிதாய்ஆத்தி சூடிகள் கற்போம்
மதியால் முற்போக்கு நிலை காண்போம்
நமக்கென்ன,எனநகர்வதல்ல மனிதம்
நகர்வலம், இன்றான மன்னரான நமக்குமே.
முக்காலம்போல் உணர்விக்கும் மூன்றும்
முக்கிய எச்சரிக்கையே- எனினும்
அடுத்து கெடுக்கும் உரிமைமீறலை
தடுத்து களைவதுநமது கடமையே.
புலனடக்க வகையின் பரப்புரை
பாதையில், கண்டது,கேட்டது கொண்டு
ஆராயாது பேசாதேஎனக்கொள்வோம்
அதீதம் அகற்றி அளவினை அறிவோம்.
நன்றி,
ந.பிரேமா,
5,ராமச்சநாதிரா நகர்,
ஒண்டிப்புதூர்,
கோவை-641016,
அலைபேசி-9360562902.
💬 கருத்துகள் (0)