உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

இணைய அரக்கன் ஜதியில்
துதிபாடும் செல்பேசி
அவலங்களை
இளஞ்சிறு மொட்டுக்கள்
காண சகியுமோ!
அதனால்தான்
பூமித்தாய்
கோபக்கனலில்
எரிமலையாய்
வெடிக்கிறாளோ!
இல்லை
கடல்கோளாய்
பொங்குகிறாளோ!

‘தண்’ இல்லா வார்த்தை ஜாலங்களால்
நிரம்பி வழிகிறது
முதியோர் இல்லங்களும்!
அனாதை
இல்லங்களும்!

முக்கனிகளின்
சாரமாம்
இனிய வார்த்தை
அலைகடல்கள்
சரம்சரமாய் பாய
கனல்கக்கும்
வார்த்தை அனல்கள்
எரிமலையாய்
வெடிப்பதேன்!

மணல்பொம்மையிடம்
பரிவு காட்டும்
பண்பு மாயமாய்
உள்ளக் கிடக்கையில்
பொதிந்து கிடக்கிறது!

👁 16 வாசிப்பு ☰ 32 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.