மூன்று குரங்குகள்
வாலில்லா குரங்குகள்,
வாயாடும் குரங்குகள்,
வம்பு செய்யும் குரங்குகள்,
வதந்தி பேசும் குரங்குகள்,
சீரி பாயும் குரங்குகள்,
சிந்தனையை தடுக்கும் குரங்குகள்,
சோதனையை கொடுக்கும் குரங்குகள்,
சாதனையை தடுக்கும் குரங்குகள்,
தன்னம்பிக்கை இல்லா
குரங்குகள்,
திரை மறைவில் ஆடும் குரங்குகள்,
தினம் தினம் புது உருவம் கொள்ளும் குரங்குகள்,
நம்மை ஆட்டி வைக்கும் குரங்குகள்,
நாம் அடிபணிய கூடா குரங்குகள்,
நித்தம் நித்தம் பித்து பிடிக்க வைக்கும் குரங்குகள்,
ஆன்றோர் சான்றோரை அண்டாத குரங்குகள்….
அவை தான்
“பொறாமை, வீண் கோபம், சோம்பேறித்தனம்”.
💬 கருத்துகள் (0)