உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள் ( அறுசீர் விருத்தம் )

எளிதாம் தோன்றும் தோற்றம்
எளிதில் கொள்ளும் தேற்றம்

ஒளிரும் மாயம் பேணும்
ஓசை இன்றி காணும்

மிளிர்வின் மயக்கம் அழுத்தும்
மீளாத் துயரில் புதைத்தும்

களிக்கும் மிதப்பில் நுழையும்
காட்சிக் காந்த அழைப்பே!

எந்த விதத்தில் ஈர்க்கும்
எதுவும் புரியா ஆக்கும்

அந்த இதத்தில் பணியும்
அமைப்பில் பண்பும் தணியும்

மந்தம் அறிவின் துளையில்
மாண்பில் பங்கம் விளைவில்

வந்த அபயம் துளிர்வின்
வாகில் குரங்கின் கிளையே!2

பற்றில் உந்தும் ஓட்டம்
பரப்பில் இணையும் நாட்டம்

வற்றா சீவன் தன்மை
வாய்ப்பில் சலிக்கா வன்மை

முற்றும் துறக்கும் நினைவில்
முழுதும் மூழ்கும் விளைவில்

குற்றம் போக்கும் வாழ்வும்
கூடும் மகிழ்வும் நெகிழ்வே!

திட்டம் பண்பின் முல்லை
தீர்க்கம் அன்பின் எல்லை

வட்டம் இடும் ஞாலம்
வந்தால் உண்மைக் கோலம்

எட்டா உயரம் முயற்சி
எல்லாம் வைரம் பயிற்சி

சட்டம் சொல்லும் ஒழுங்கால்
சார்ந்தும் நிலைக்கும் விழுதே!

👁 26 வாசிப்பு ☰ 32 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.