உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

நீதானே என் பொன்வசந்தம்

தீக்கங்குகளுக்கு மத்தியில்
அகப்பட்டுக்கொண்ட
சிற்றெரும்பாகிறேன்.

உன் வாசனையில்லாப் பிரபஞ்சம்
அழியத் தொடங்கிவிட்டது.

கடைசி மனிதனின்
அழியாக் குறிப்புகளை
நானே எழுதுகிறேன்.

விரிந்த கண்களில்
பூமிப்பந்து
வகிடாய்ப் பிளந்து எரிய
கருந்துளை
உறிஞ்சித் தொலைத்துவிட்ட
என் நெஞ்சுக்குழியின் ஈரத்திற்கு
இனிப்புச்சுவை.

சிலநேரங்களில்
கரிப்புச்சுவை.!

👁 2 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.