உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சிறகுகள்! (உலகப் பெண்களுக்குச் சமர்ப்பணம்)

பறந்தது பைக் சீக்கிரம் இன்னும் மூன்று நிமிடங்கள் தான் இருக்கு பஸ் கிளம்பி விடும் என்றபடி சுமதி பைக்கின் பின்னே உட்கார்ந்து கொண்டு தன் கணவனை வேகமாக ஓட்டச் சொன்னால். அதே சமயத்தில் அவள் போகும் பஸ் புறப்படும் தருவாயில் இருந்தது. ஹேன்பேக்கை வயிற்றில் அணைத்தபடி கணவனைப் பார்த்து டைனிங் டேபிளில் சாப்பாடு இருக்கு சாப்பிடுங்க பார்த்து வீட்டுக்குப் போங்கள் என்று கூறிவிட்டு அவளுக்கென்றே காத்திருந்தது போல் ஒரு சீட் இருந்தது அதில் உட்கார்ந்து பெருமூச்சு விட்டாள். அந்த பெருமூச்சு மனசுக்குள் சொன்ன சேதி எப்படியோ பஸ்ஸைப் பிடித்து விட்டோம் என்று. சுமதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹெட் கிளர்க் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

சுமதி வீட்டில் அவளுடைய கணவன் சொல்லு அவள் வேலைக்குப் போயிட்டா எப்ப வருவ சாயங்காலம் 5 மணிக்குள் அவள் வருவதற்குள் நான் வீடு வர வேண்டும். நாம் வழக்கமாக சந்திக்கிற அதே ஹோட்டலில் தான் என்று கூறி மொபைலை அவசரமாக வைத்து விட்டு உல்லாச உலகத்திற்கு கிளம்ப தொடங்கினான் சுமதியின் கணவன் சுரேஷ்.

சுமதி இறங்கும் ஸ்டாப் வந்தது மீண்டும் தன் தோளில் தொங்கிய ஹேன்பேக்கை வயிற்றில் அணைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள் அவள் நடை உழைக்கும் வர்க்கம் என்று காட்டியது. அதே சமயத்தில் அவள் வயிற்றில் அணைத்திருந்த ஹேன்பேக் குடும்ப சூழல் வயிற்றுக்காக வேலைக்கு ஓடி தான் ஆகவேண்டும் என்று உணர்த்தியது….

ஆசிரியர்
விருதை.இன்பா

👁 26 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

விருதை. இன்பா அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.