சுட்டி பந்தங்கள்
சுட்டிய உறவுகள் என்றும் தொடரம் பந்தங்கள் !
ஒரு வயதில் சுட்டுவிரல் எனக்கு அறிமுகப் படுத்தியது என் அம்மாவை!
ஐந்து வயதில் சுட்டுவிரல்
எனக்கு அறிமுகப்படுத்திய
உறவு என் தம்பி, தங்கை!
ஏழு வயதில் சுட்டுவிரல் எனக்கு அறிமுகப்படுத்திய உறவு மாமா, அத்தை!
ஒன்பது வயதில் சுட்டு விரல் என் நண்பனை
எனக்கு அடையாளம் காட்டியது!
இருபத்தொரு வயதில் தோள் கொடுக்கும் தோழனை கண்டேன் என் சுட்டு விரல் மூலம் !
இருபத்தெட்டு வயதில் என்
வாழ்க்கை தலைவியை கைப்பிடித்தேன் சுட்டு விரல் உதவியோடு !இன்றும் என்னை தாய்போல கவனிக்கிறாள்!
சுட்டு விரல் உறவுகள்
தொடர்ந்து வரும் இன்பங்கள்! இன்றோடு
முடிவதில்லை இந்த சுட்டு விரல் கவிதை !
பொ. நளின பிரபா
💬 கருத்துகள் (0)