சுட்டு விரல்
பள்ளி என்பது அறிவை
வளர்க்கும் ஆலயம்
பயம் அகற்றி
பணிவைகற்கச் செய்தீர்
காலத்தால் அழியாத
கல்வியை தந்தீர்
அறியாமை இருளை நீக்கி
அறிவு ஒளி ஏற்றுநீரே
எழுத்து மூலமாய்
என்னை செதுக்கிய சிற்பியே
தவறுகளை திருத்தி
நல்வழி காட்டிநீரே
எனக்கு தாய் தந்தையாக
இருந்து வழி நடத்தினீரே
அறிவை ஊட்டும்
அன்னை மடியே நீவீர்
தன்னை மெழுகாக்கி
மானாக்கரை
உயர்த்தியவரே
அன்பை பண்பை
ஒழுக்கத்தை கற்றுத் தந்தவரே
எல்லோரையும் ஏணியாய்
இருந்து ஏற்றியவரே
நட்பு எனும் விதையை
மனதில் விதைதவரே
ஒற்றுமையே உயர்வு
கதையின் மூலம் கற்க செய்தவரே
உயிர் மெய் எழுத்தை
உணரச் செய்தவரே
வர்ணம் தீட்டும்
வகுப்பறையாக மாற்றிநீர்
காலம் கடந்தாலும்
நீங்காத நினைவுகளுடன்
தலைவணங்கி என் நன்றியை
சொல்கிறேன் என் ஆசிரியருக்கு
க.ரெங்கநாயகி ஆசிரியர் பி.லிட்,எம்.ஏ,எம்.பில்,பி.எட்.
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்.
💬 கருத்துகள் (0)