உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

சுட்டுவிரல் தானே என்று
சும்மா நினைக்காதீர்
அறியாமை உறக்கம் களைக்க
தட்டும் விரல் அது!

தவறான பாதையை விட்டு – நான்
தலைநிமிரக் காரணமாயிருந்தது
வகுப்பறை கரும்பலகையைச் சுட்டி வாழ்க்கை வகுப்பறையில்
வாழக் கற்றுக் கொடுத்தது

சுண்ணக்கட்டியைப் பிடித்துப் பிடித்து
சுக(ய)த்தை இழந்த விரல்தான்
சுடராய் முன் நின்றவனை சூரியனாக்கியதும் அவ்விரலே…

பணத்தை எண்ணும் பொழுது பசைக்கு எச்சில் தொடும் விரலல்ல
பகைவன் பிள்ளை ஆனாலும்
பாங்காய் வளர்க்கும் விரலதுவே

சாதாரணமாய் என் விரல்பிடித்து
சலித்த மணலில் எழுதிய விரல்தான்
சரித்திரக் கவிதைகளை இன்று நான் பொறித்திட வித்தானது…

வெற்றி மேடை ஏற – நான்
பற்றிய படிகள் அவ்விரல்கள்;
மாணவன் உயர்வில் மகிழும் – அந்தச் சுட்டுவிரலுக்கு என் சுட்டிவணக்கம்!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

👁 11 வாசிப்பு ☰ 21 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.