சுட்டுவிரல்
சுட்டுவிரல்
அன்னையாக அரவணைத்து அன்புக்காட்டி அறிவுக்
கண்களைத் திறந்து வைப்பார்.
கைவிரல்களைப் பிடித்து கரும்பலகையி லெழுதி
எழுத்துச்சுரங்களைச் சொல்ல வைப்பார்.
வாய்ப்பாட்டை வாயிவிட்டுச் சொல்ல வைத்து
மனனம் செய்ய வைப்பார்.
பாடங்களைப் பாட்டுப்பாடி பாசத்துடன் மகிழவைத்து
பண்பாட்டை ஊட்டி வைப்பார்.
நாள்தோரும் கருத்துள்ள கதைகளைக் கூறி
கற்பனையைத் தோன்ற வைப்பார்.
ஆய்வகத்தில் அறிஞர்கள் படத்தைச் சுட்டிக்காட்டி
அறிவியலைப் சொல்லி வைப்பார்.
கோபம் நீங்கி நல்ல குணத்துடன்
கற்றதை மனதில் பதிய வைப்பார்.
தன்னம்பிக்கை கதைகள் பலக்கூறி மதிப்பெண்
தரத்தில் உயர வைப்பார்.
அழுகையின் கண்ணீரைத் துடைத்து அன்புக்காட்டி
ஆறுதல் சொல்லி வைப்பார்.
வேற்றுமையை அகற்றி ஒற்றுமையைப் சொல்லி
எந்நாளும் மகிழ்ச்சியாக வாழவைப்பார்.
தன்சோதனையை நீக்கி பிறரை சாதனையாக்க
சுட்டுவிரல் சுடர்ரொளியாய் வழிகாட்டி
எல்லோர் மனதிலும் எழுத்தறிவித்த இறைவனாய் வையகம்
போற்ற வாழ்ந்துக் கொண்டிருப்பார்.
க.பக்கிய ராஜ்,
தமிழ்த்துறை,
உதவிப்பேராசிரியர்,
ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
செளடாம்பிகா குழு நிறுவனம்,
அம்மாப்பேட்டை,
திருச்சிராப்பள்ளி -620009.
💬 கருத்துகள் (0)