சுட்டுவிரல்
அறிவு பசிக்கு சோறு ஊட்டி
தாயானாய்.
அன்பினால் நல்லொழுக்கம் புகட்டி தந்தையானாய்.
கல்வியில் தோள் கொடுத்து உயர்த்தி தோழனானாய்.
கல்லும் முள்ளும் அகற்றி
நற்பாதை காட்டும் வழிக்காட்டியானாய்.
அறிவு சுடர் ஏற்றி மனிதனாக்கினாய்.
தோற்றங்கள் பல எடுத்தவர்.
ஏற்றங்கள் பல கொடுத்தவர்.
அசையாமல் நின்று பேருருவம் எடுக்க வைத்த பெருந்தகையே!
பல சிட்டுக் குருவிகளுக்கு
வழிகாட்டியது உன்
சுட்டுவிரல்!
💬 கருத்துகள் (0)