சுட்டுவிரல்
சுட்டுவிரல்
என் முதல் எழுத்தை
என் விரல் பிடித்து எழுத வைத்தது நீங்கள்.
நான் தவறாக எழுதினால்
அதை அழிக்காமல்,
சரியாக எழுத கற்றுக் கொடுத்ததும் நீங்கள்.
பாடம் புரியாமல் நான் பார்த்தபோது,
புத்தகத்தை மட்டும் சுட்டவில்லை உங்கள் விரல்,
என்னைப் பார்த்தும் ஒரு நம்பிக்கை கொடுத்தது.
“முடியாது” என்று நான் நினைத்த நேரத்தில்,
“முயற்சி செய்” என்று
என் பாதையைச் சுட்டியது.
நான் இன்று எதை நோக்கிப் போகிறேன்
என்று எனக்கே தெரியாத நேரத்தில்,
என் எதிர்காலத்தை மட்டும்
நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
உங்கள் சுட்டுவிரல்
வெறும் விரல் அல்ல,
நான் தவறாமல் நடக்க
என் அருகில் வந்த ஒரு வழிகாட்டி.
நான் உயரம் செல்லும் ஒவ்வொரு முறையும்,
அதன் பின்னால் இருக்கும்
உங்கள் சுட்டுவிரலை மறக்க மாட்டேன்.
💬 கருத்துகள் (0)