சுட்டுவிரல்
தலைப்பு- சுட்டு விரல்
அறியாமை என்னும் இருள் நீக்கி;
அறிவொளி என்னும் அகல் விளக்கேற்றி;
அரியாசனத்தில் அமர வைத்தது அச்சுட்டு விரல்!
ஏட்டில் எழுத கற்றுக் கொடுத்த அந்த விரல்;
ஏற்றம் கொண்டு சாதனை படைக்க வைத்த விரல்;
ஈடு இணையற்ற கல்விச் செல்வம் குறையாது
அள்ளித் தந்த கருணை உள்ளமே குருவே!
எழுத்தாணி கை பற்றி கற்றுத் தந்தாய் !
ஏற்றுமிகு வாழ்விற்கு வழி வகுத்தாய்!
துளி கூட நஞ்சில்லா நெஞ்சம்
நாங்களே தஞ்சமென எங்கள் வாழ்வு தழைக்க செய்த நல் உள்ளம் ஆசானே!
அரியாசனத்தில் நாங்கள் அமர அயராது எங்களை கரையேற்றிய உங்கள் பெருமை என்றும் போற்றுவோம்! பறைசாற்றுவோம்!
-பிரியங்கா.பா
மதுரை.
💬 கருத்துகள் (0)