உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

சுந்தரம் மிகு இவ்வுலகில்
நாங்கள் சுகமாய் வாழ
சுத்த இருதயத்தோடு
எங்களது தவறுகளை சுட்டிக்காட்டி
சிகரம் தொட சிறந்ததொரு
செம்மையான பாதையைக் காட்டியவர்
எங்களது ஆசிரியர்!

கற்பித்தலில் புதுமையை
விதைத்து
கற்றலில் குறைகளை களைந்து
ஒவ்வாருவரின் திறமைகளை சுட்டிக்காட்டி
கலங்கரைவிளக்கமாய்
கருத்தாய் வழிகாட்டியவர்!

கடையேழு வள்ளல்களை கற்றோம்
உங்களது கொடைக்குணத்ததால்
கண்டோம்.
அந்நாட்களில் என்னைப்போலவே எத்தனையோ மாணவர்களுக்கு எழுதுகோல்களும்,
ஏடுகளும் வாங்கித்தந்தவர்!

ஆதாயம் தேடும் இவ்வுலகில்
அரசுப் பணியில் இல்லையெனினும்
அயராது உழைத்தவர்!

எங்களது அறியாமை இருள்அகற்ற
இருள்சூழ்ந்தபின்தான்
தம் இல்லம் சென்றவர்!

குன்றின்மேலிட்ட விளக்காய் குன்றாது
ஒளிவீசி
என்னைப்போலவே
எத்தனையோ மாணவர்களை உருவாக்கியவர்!

எங்கள் ஆசிரியர் ஐயா
சரவணன் அவர்களுக்கு
சமர்ப்பணம்.

👁 21 வாசிப்பு ☰ 31 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (1)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.

  1. முனைவர் அ.கிறிஸ்டியானா · 10 நாள் முன்

    மேம் வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் இந்த நன்நாளில் ஆசிரியர் தின வாழ்த்துகள்.