உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

தாயின் அன்பிற்கு ஈடாகுமா

எத்தனை எட்டு கட்டி, மெட்டுக் கட்டிப் பாடினாலும்
அன்னையின் தாலாட்டைப் போல் வருமா?

எத்தனை சொந்தங்கள் நம்மீது
பாசம் காட்டினாலும்,
அத்தனை சொந்தங்களும்
தாயின் பாசத்திற்கு ஈடாகுமா?

“நீ என்ன சம்பாதிக்கிறாய்?”
என்று கேட்பதற்கு முன்,
“நீ எப்படி இருக்கிறாய்?
சரியாகச் சாப்பிட்டாயா?”
என்று அக்கறையுடன் கேட்கும்
உன்னதமான தெய்வம் அன்னை!

ஆயிரம் குறைகள்
நம்மிடம் இருந்தாலும்,
அத்தனை குறைகளையும் மறந்து,
தன் அன்பினால் அரவணைத்து,
நம்மை என்றும் நேசிக்கும்
அன்னை ஒரு தெய்வம்!

அந்தத் தெய்வத்தின் பெயர்தான் தாய்!

👁 14 வாசிப்பு ☰ 19 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.