உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

“வானரம் சொல்லும் வாழ்வியல் “

“வானரம் சொல்லும் வாழ்வியல் ”

கண்ணால் தீமை காணாதே — கைகூப்பி நல்வழி நாடிடு,

செவியால் தீமை கேளாதே — செம்மையின் வழியில் நடந்திடு,

வாயால் தீமை பேசாதே — வாய்மையின் மொழியைப் பேசிடு,

காந்தியின் மூன்று குரங்குகள் — காட்டிடும் நல்வழி போற்றிடு!

தீயதைப் பார்ப்பது தவிர்த்து — தூய்மையை உள்ளம் சேர்த்திடு,

தீய சொல் கேட்பதை விட்டே — தேனெனும் சொற்களை ஏற்றிடு,

தீய மொழி பேசுதல் நீக்கி — நீதியின் பாதையில் சென்றிடு,

நாட்டினில் அமைதி மலர — நற்பண்பை நாளும் வளர்த்திடு!

சத்தியம் என்னும் விளக்கை — சந்ததியும் கையில் ஏந்திட,

அன்பெனும் அறத்தை நெஞ்சில் — அழியாமல் என்றும் காத்திட,

வன்முறை நீங்கி உலகம் — வளமுடன் வாழ வழிகாட்டும்,

காந்தியின் மூன்று குரங்குகள் — காலந்தோறும் நம்மை வாழ்த்திடும்!

👁 20 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.