உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

தேவதை கோலம்

பனித்துளிகளை உறைத்து
கிண்ணங்களில் நிரப்பியிருக்கிறாள்
விரல் தோய்ந்த புள்ளிகளெல்லாம்
பூக்கோலங்களாகியிருந்தன.

கோலங்கள்
கோலாகலங்களாகின்றன.

நீ ( ர் ) தெளித்த வாசலில்
வந்து வீழ்கிறேன்.

வானியல் வல்லுநர்கள்
புதிய கிரகமொன்று கிடைத்துவிட்டதாய்
குதூகலிக்கிறார்கள்.

வண்ணங்களானவள்
இப்போதும் குனிந்தபடியேயிருக்கிறாள்.

பனித்துளிகள்
கரைய ஆரம்பித்திருக்கின்றன
நிழற்படத்திற்கு சேதமேதுமில்லாமல்…

👁 1 வாசிப்பு ☰ 16 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.