அலைபேசிக்கு மின்சாரமில்லாத
அலைபேசிக்கு மின்சாரமில்லாத,
கதவுகளைக் கொட்டிப்பார்க்கும்
ப்ரியமான அந்நியர்களின்
தொந்தரவில்லாத,
ஆதிக்காதல் வாசனைத்
தீரத் தீரக் குறைவில்லாத,
நீயும் நானும் மட்டும்
போர்வைக்குள் தழுவித் தனித்திருக்கும்
இந்தப் பெருமழை நாள்
போதாமையில் புலம்புகிறேன் விழுந்து.
எனக்கு மேலுமிரண்டு
வானங்கள் வேண்டும்.!
சொட்டுச் சொட்டாய்
விழுகிறது உன் காதல்
நிரம்பித்ததும்பும்
பேராவலோடு காத்திருக்கிறேன்
உன் வாசனைக் குவியல்கள்
இரத்த நாளங்களில்
கூத்தாடுகின்றன.
உயிரை உடைக்கும் அழுத்தம் குறித்து
அச்சம் கொண்டிருக்கிறேன்.
💬 கருத்துகள் (0)