அம்மா
“எல்லோரும் என் முகத்தைப் பார்த்தார்கள்,
என் மனதைப் பார்த்தவள் மட்டும் அம்மா.”
என்னை
முதலில் கையில் எடுத்தவள் நீ,
நான் விழும்போது
முதலில் ஓடி வந்ததும் நீ,
என் முகத்தைப் பார்த்தே
“என்னாச்சு?” என்று கேட்பாள்;
நான் “ஒன்றுமில்லை” என்றாலும்
அவள் மட்டும்
அதை நம்பவே மாட்டாள்…..
நான் பேசத் தெரியாத வயதில்
என் அழுகையைப் புரிந்துகொண்டாய்;
இப்போது என்
மௌனங்களை புரிந்துகொள்கிறாய்…..
நான் வளர வளர,
அவள் கைகலில்
கொஞ்சம் கொஞ்சமாக
சுருக்காங்கள் வந்தன…..
என் கனவுகளுக்கு உயிரூட்டியவள்…..
நான் பெரியவளாகிவிட்டேன் என்று
உலகம் சொன்னாலும்,
அவள் மட்டும்
இன்னும் என் தலையைத் தடவி
“கவனமா இரு” என்பாள்…..
அம்மா….
உன்னை பற்றி எழுத்துவாதற்கு வார்த்தைகள் இல்லை….
கடவுளை நான் பார்த்ததில்லை…..
ஆனால் என் கண்ணீரைத் துடைத்த அந்தக் கைகளில்,
அவரை உணர்ந்திருக்கிறேன்,
அது என் அம்மாவின் கைகள் தான்………
-தமயந்தி. அ
நீலகிரி காலை மற்றும் அறிவியல் கல்லூரி – Thaloor.
💬 கருத்துகள் (0)