உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

அன்பின் உருவம்
அம்மா……

அக்கறையின் ஆணிவேர்
அம்மா……

சுயநலமின்றிய சுடர்
அம்மா…..

நடமாடும் தெய்வம்
அம்மா…….

உலகம் சுமக்கும் முன்பே
தன் வயிற்றில் சுமந்தவள்
அம்மா……

முதல் அழுகையில்
ஆனந்தக்கண்ணீர் வடித்தவள்
அம்மா….

தவழும் வயதில்
தாய்ப்பால் தந்தவள்
அம்மா…….

மழழை மொழி கேட்டு
மகிழ்பவள் அம்மா……

பாரபட்சம் இன்றி
பாசம் வைப்பவள்
அம்மா……

எதிற்பார்பில்லாமல்
எதையும் செய்பவள்
அம்மா……

ஈடுஇணை இன்றி
ஈகை அளிப்பவள்
அம்மா……

நம் துயிலுக்காக தன் துயிலை
தியாகம் செய்தவள்
அம்மா……

உயிர்கொடுத்து உலகம்
காண செய்தவள்
அம்மா…..

சுயநலமிகுந்த உலகில்
கேடு நினைக்காத ஒரே ஜீவன்
அம்மா……

கைமாறு கருதாமல் காலத்திற்கும்
நமக்காய் வாழ்பவள்
அம்மா……

உன் அன்பிற்கு ஈடுஇனை
வேறேதம்மா இவ்வுலகில்…..

அன்னையாய் உனைபெற
என்ன தவம் செய்தேனோ
அம்மா……

👁 14 வாசிப்பு ☰ 45 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.