உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா நூலோடு அலைகிறாள்

1996-ல்
டிப்ளமோ கூட்டுறவு முடித்திருந்த
அம்மாவின் கல்லூரி விண்ணப்பத்தை
ஒளித்துவைத்து —
அவள் கனவுகளை
சிதைத்தவர் அப்பா.
அதைத் தெரிந்தும்
அவரையே காதலித்துத்
திருமணம் செய்துகொண்டதிலிருந்தே
புரிந்துகொண்டேன்.
காதலுக்கு,
கண் மட்டும் அல்ல;
சில சமயங்களில் அறிவும் இல்லை!
சுயநலத்திற்குத்
தந்தையிட்ட பெயர் —
காதல்!
கத்தரிக்கப்பட்ட சிறகுகளை
எவ்வாறு தைப்பதென்று தெரியாமல்
நூலோடு அலைகிறாள்
தன் கனவுகளின் தெருக்களில்!

👁 15 வாசிப்பு ☰ 20 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.