உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா வயிற்றின் அதிசயம்

அம்மா வயிற்றில் தொடங்கியது என் வாழ்க்கை,
அந்த இருள் தான் எனக்கு முதல் ஒளி.
அவள் இதயத் துடிப்பு என் முதல் இசை,
அதிலே நான் வளர்ந்தேன் மெதுவாக.

சிறு கனவாய் உருவான நான்,
அவள் உடலில் உயிராய் மாறினேன்.
அவள் சுவாசம் என் சுவாசமாய்,
அவள் உணர்வு என் உணர்வாய்.

ஒன்பது மாதம் ஒரு உலகம்,
அவள் வயிறு என் வீடு ஆனது.
வலி தாங்கி என்னை காத்தாள்,
வாழ்க்கை தர துன்பம் சுமந்தாள்.

என் முதல் அழுகை கேட்டபோது,
அவள் சிரிப்பில் உலகம் மலர்ந்தது.
அந்த நொடி ஒரு புது பிறவி,
அவளுக்கும் எனக்கும் இணைப்பு.

அம்மா வயிறு ஒரு கோயில்,
அதில் நான் வளர்ந்த தெய்வம்.
அவள் அன்பு முடிவில்லாதது,
என் உயிரின் முதல் ஆதாரம் அது.

என்றும் மறக்க முடியாத உண்மை,
அம்மா தான் என் வாழ்வின் தொடக்கம்.

👁 20 வாசிப்பு ☰ 22 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

K.சித்ரா அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.