அழகாய் பிறந்த மூன்று குரங்குகள்
அழகாய் பிறந்த மூன்று குரங்குகள்
கஞ்சாவின் அடிமையால் காயம் பட்டதொன்று
மதுவின் அடிமையால் மாட்டிக் கொண்டதொன்று
பாலியல் வன்கொடுமையால் சிக்கி தவித்ததொன்று
மூன்றும் விட்டுவிட முடியாமல் மூழ்கி கிடந்தது
இயற்கையின் மாற்றமல்ல வளர்ந்த சூழலின் மாற்றம்
அடிமைப்பட்ட குரங்குகள் மூன்று சொன்னது
அறிவு மங்கி அனைத்தையும் இழந்து விட்டோம் .
சான்றோர் சொல்வதை சாதனையாக நினைத்திருந்தால்
பெற்றோர் சொல்லுவதை பெருமையாக கேட்டிருந்தால்
ஆசான் சொல்வதை அறிவாக எடுத்திருந்தால்
உறவினர் கூறுவதை உதாரணமாக வாழ்ந்திருந்தால்
நண்பன் சொல்லறிந்து நல்வழியில் நடந்திருந்தால்.
பேதைமையை பிஞ்சு மனதிலே கிள்ளி எரிந்திருந்தால்
மனதையும் மாற்றிருப்போம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்.
க.பாக்கியராஜ்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, செளடாம்பிகா குழு நிறுவனம், அம்மாப்பேட்டை, திருச்சிராப்பள்ளி-620009.
💬 கருத்துகள் (0)