கரும்பலகையில் இருக்கும் எழுத்துக்களை சுட்டி,
கரும்பலகையில் இருக்கும் எழுத்துக்களை சுட்டி,
அறியாமை என்னும் இருளை அழித்த விரல்…..
” இதுதான் சரியான பாதையா? “என்று
யோசித்த என்னை….. என் வாழ்வின் சரியான பாதைக்கு திசை காட்டிய விரல்…..
தவறு செய்தபோது கண்டிப்பதும் தடுமாறிய போது கை கொடுப்பதும் அதே சுட்டு விரல் தான்!
பாடங்களை மட்டும் கற்றுத்தராமல்,
வாழ்க்கையே கற்றுத் தந்த என் ஆசானின் அந்த சுட்டு விரலுக்கு
என் வாழ்நாள் முழுவதும் எங்கள் நன்றியே அழியாத கையொப்பம்!
ஆசிரியரின் சுட்டவிரல் மாணவனின் எதிர்காலத்தை சுட்டுகிறது.
💬 கருத்துகள் (0)