உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

குன்றென நிமிர்ந்து நில்

சாதிக்க பிறந்த என் கண்மணியே

சோதனையை கண்டு துவண்டு விடாதே

வேதனையை நினைத்து வெதும்பி விடாதே

ஆத்திரத்தால் அறிவை இழந்து விடாதே

குடும்பச்சுமையைக் கண்டு சுருண்டு விடாதே

என்னதான் துன்பம் வந்தாலும் அதை

எளிதாக கடக்க கற்றுக் கொள்

உன்னை விட்டுக்கொடுக்காத உறவு வந்தால்

சற்றும் யோசிக்காமல் பிடித்துக் கொள்

இதயத்தில் துணிவிருந்தால் இமயமும் இடுப்பளவு தான்

எண்ணத்தில் துணிவிருந்தால் எதையும் வெல்லலாம்

எழுந்து வா என் கண்மணியே

எதையும் கண்டு இடிந்து விடாமல்

குன்றென நிமிர்ந்து நில் எதையும்

வென்று நீ வெற்றி கொள்.

ர.கண்ணகி
செய்யாறு

👁 10 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

தமிழ்க்கண்ணகி அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.