உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மரச்சிற்பங்கள்

மறித்துப் போன மரங்களின்
மறுபிறவி
எச்சங்கள் கழிந்த எழிலோவியம்

கூர்மை தீட்டிய ஓவியம்
காலத்தால் அழியாக் காவியம்

கலைஞன் கருத்தரித்து
கண் மூடா தவமிருந்து
பெற்றெடுத்த பேறு

ஆயுள் இழந்து
அழகுப் பொருளாகும்
உணர்ச்சியில்லா
உயிர் பெறும்

வண்ணச் சேர்க்கையில்
வடிவு பெறும்
எண்ணம் கூட்டி ரசிக்க வைக்கும்

உண்மைக்குப் போட்டியாகி
உருவம் தாங்கும்
பொய்மையின்றிப்
பெரும் பயனாகும்

ஆடாது அசையாது
காட்சியாகி
அழகால் நம்மை ஆட்டுவிக்கும்

மரச் சிற்ப மனிதர்கள்
நாநிலத்தில் உண்டு
நல்ல பயன் தருவர்
தன் நலம் துறந்து.
*********************************
தமிழ்நிலா

👁 11 வாசிப்பு ☰ 28 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

தமிழ்நிலா அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.