உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

அன்று மூன்று குரங்குகள் மனிதனுக்கு அறம் சொன்னன;
தீமையை நோக்காதே,
தீச்சொல்லை நாடாதே என்றன!
தீவினைக்கு உன் நாவைத் துணையாக்காதே என்றன!
காலம் தன் பக்கங்களைப் புரட்டியது—
அறம் உரைத்த குரங்குகள் சிலைகளாயின;
அறம் தொலைத்த மனிதர்கள் குரங்குகளாயினர்!
கண்ணெதிரே அநீதி காட்சியாக விரிந்தாலும்,
சுயநலத்தின் திரையை கண்மீது இறக்குகிறோம்;
பாதிக்கப்பட்டோரின் அழுகுரல் காதைத் துளைத்தாலும்,
பாராமுகத்தின் கதவுகளை காதுகளால் சாத்துகிறோம்;
உண்மை உதடுகளைத் தேடி வந்தாலும்,
பயத்தின் பூட்டு மௌனத்தைப் பூட்டுகிறது!
அன்று அந்தக் குரங்குகள் எச்சரித்தன—
“தீமைக்குத் துணை நிற்காதே!” என்று;
இன்று மனிதர்கள் முணுமுணுக்கிறார்கள்—
“தீமை கண்டாலும் பேசாதே!” என்று!
குரங்குச் சிலைகள் இன்னும் மாறவில்லை;
மாறிவிட்டது மனிதனின் மனசாட்சி!
சுயநலத் திரையை இனியாவது கிழிப்போம்;
மூடிய காதுகளால் மனிதத்தின் குரல் கேட்போம்;
அஞ்சிய உதடுகளுக்கு உண்மையின் குரல் கொடுப்போம்;
மூன்று குரங்குகள் மீண்டும் சிலைகளாகட்டும்;
வீழ்ந்த மனிதன் மட்டும் மீண்டும் மனிதனாகட்டும்!

👁 12 வாசிப்பு ☰ 24 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.