உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

சாலையில் மூன்று குரங்கினை கண்டேன்
வாழ்க்கையில் சந்திக்கும் பல மனிதனின் பின்பத்தை போல
ஒன்று கண்ணை மறைத்தது,
மற்றொன்று காதினை மூடியது,
இறுதியாக ஒன்று வாயினை அடைத்தது.
கீழே தவறி விழுந்த மனிதனை ,பார்த்தும் பார்க்காமல் செல்லும் மனிதனின் மனிதாபிமானமற்ற செயலினை கண்டேன்
சாலையில் கையேந்தி கேட்பவனை பார்த்து
செவியில் கேட்காதது போல கடந்திடும் மனிதனை கண்டேன்
தவறு நடந்த இடங்களில் எல்லாம் தட்டி கேட்காமல்
ஊமையாக தன்னை பாதுகாத்த மனிதனையும் கண்டேன்
நேரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்
பச்சைவந்தியை போன்ற மனிதனை பலவிதமாக கண்டேன்
இந்த மனிதனை மூன்று குரங்குகளில் அடக்கி விட முடியாது
மூன்றும் ஒன்று சேர்ந்த மனிதனை கண்டேன்
மூன்றும் இல்லாமல் நான் உத்தமன்
என நடிக்கும் மனிதனையும் கண்டேன்
ஏன் இவ்வாறு தன்னை மாற்றி கொள்கிறான்
தன்னை ஒரு விதமாக காட்டிக்கொள்ளும்
மனிதனை மட்டும் நான் இன்னும் காணவில்லை
நீங்கள் பார்த்தது உண்டா ?
ஏனோ, சந்தித்தால் என்னிடம் காட்டுங்கள்
அந்த மனிதனை அருங்காட்சியில் வைத்து விடுவோம்
அடுத்து வரும் தலை முறையினருக்கு,
மனிதன் யார் என்றே தெரிந்து கொள்ளட்டும் .

👁 11 வாசிப்பு ☰ 24 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.