மூன்று குரங்குகள்
கண்களை மூடிக்கொண்டாய்
“தீயதைப் பார்க்காதே” என்பதற்காகவா?
நடப்பது எதுவாக இருந்தாலும் கண்டு கொள்ளாமல்
இருந்துவிட்டால் போதும் என்பதற்காகவா?
காதுகளை மூடிக்கொண்டாய்
“தீயதைக் கேட்காதே” என்பதற்காகவா?
தீய சொற்கள் எதையும் நான் கேட்கவில்லை என்று
உன்னை நீயே நியாயப்படுத்திக் கொள்வதற்காகவா?
வாயை மூடிக்கொண்டாய்
“தீயதைப் பேசாதே” என்பதற்காகவா?
யார் என்ன பேசினாலும் நான் பேசமாட்டேன் என்று
மௌனம் காப்பதற்காகவா?
ஏன்?
தீயதைப் பார்க்காதே,
தீயதைக் கேட்காதே,
தீயதைப் பேசாதே – என்று
சொல்லாமல் சொல்ல தெரிந்த உனக்கு…
“தீயதைச் செய்யாதே”
என்று சொல்லத் தெரியவில்லையா?
இல்லை
சொல்ல மனம் வரவில்லையா?
கண்களை மூடிக்கொண்டு
காதுகளை மூடிக்கொண்டு
வாயை மூடிக்கொண்டு
மூன்று உருவங்களாய் அமர்ந்து
தோற்றமளிக்க தெரிந்த உனக்கு…
“தீயதைச் செய்யாதே” – என்று
கைகளைக் கட்டிக் கொண்டு மட்டும் அமர்ந்து
நான்காம் உருவமாய் தோற்றமளிக்க தோன்றவில்லையோ உனக்கு?
– பிரசன்னா பாஸ்கரன்
💬 கருத்துகள் (0)