மூன்று குரங்குகள்
மூன்று குரங்குகள் பொம்மைகளல்ல!
மூடிக் கொள்ளும் கதவுகளல்ல!
தீமை நுழையா வழிகளடி — அவை
தேடித் தந்த விதிகளடி!
கண்ணைத் திறந்து நல்லதைப் பார்!
காதைத் திறந்து உண்மையைக் கேள்!
வாயைத் திறந்து இன்சொல் பேசு!
இவையே இன்றைய புது நெறிமுறை!
பிழையை நீக்கி நல்வழியில்
வாழக் கற்றுத் தந்தது அன்று!
அறிவால் உயர்ந்து அன்பைப் பரப்பி
வென்று காட்டுவோம் நாம் இன்று!
💬 கருத்துகள் (0)