மூன்று குரங்குகள்
எல்லையற்ற இன்பம் தரும் இவ்வுலகா ஏமாற்றம் தந்தது?
உங்களுக்கு
பாராமல் ,கேளாமல் ,பேசாமல் போகும் அளவுக்கு!
நாகரீக மாற்றம் தானே இருக்கிறது,
ஏமாற்றம் எங்கே இருக்கிறது?
ஒழுக்கமே உடையாய் மாறிய
உலகம் இருக்கிறது,
கண்ணை மறைத்த கைகளை அகற்றி விடு!
பயத்தினை போக்கிவிடு!
பாரதத்தை பார்த்துவிடு!
உண்மை பேசும் உரிமை இருக்கு
வாய் மூடும் கைகளை
அகற்றி விடு!
உரக்க குரல் கொடு!-உள்ளம் திறந்து பேசி விடு!
கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது,
செவி சாய்த்தால் உயர்வு இருக்கிறது,
செவி தடுக்கும் கைகளை அகற்றி விடு!
செவி சாய்த்து விடு!
சிறந்த கருத்துக்கள் கேட்டுவிடு!
இனியும் கைகளால் மறைக்காதே!
உண்மையை உணர்ந்து விடு!
உலகிற்கும் கற்றுக் கொடு!
💬 கருத்துகள் (0)