மூன்று குரங்குகள்
முப்பரிமாணம் அடைந்த மனிதனுக்கு
மூடத்தனம் நிறைந்த முட்டாள் குணமுண்டு
அதை முடக்கவே மூன்று குரங்குக்கு
கெட்டதைக் கேட்டு கேடு கெட்டவன் உண்டு
பாதகச்செயல் பார்த்து பாதி கெட்டவன் உண்டு
வீண்வார்த்தை பேசி வீணாய் கெட்டவன் உண்டு
அவற்றை அழகாய் கூறும் கற்சிலைகள்
அந்த முப்பரிமாண அறிந்து தெளித்தாருமுண்டு
தெளியாதாருமுண்டு
தெரியாதாருக்கும் தெளியாதாருக்கும் தெரிவிக்கவே
முப்பரிமாண முக்கியத்துவம் கூறி
விதைக்கிறேன் நல்விதையை
மனம் கொண்டு கேளுங்கள்….
மனிதரெனும் மதிப்பிற்கு உரியோரே
வசைபாடும் வார்த்தைகளை வாயால் பேசாதே
பிறர் இகழ்ச்சொற்களை காதால் கேட்காதே
கல் களவு செயல்களை கண் கொண்டு காணாதே
இம்மூன்று நிலைகளில் உன் மனதை குரங்காக்கிடு
முடிந்தவரை அறங்காத்திடு….
காவியாபிரவீன்
💬 கருத்துகள் (0)