உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

காட்சி பிழையாகின் நான் கண்ணிருந்தும் குருடாய் விலகிடவோ கண்டது கனவு என கனநேரம் சிந்தித்து மகிழ்ந்திடவோ
மறந்திடவோ
இரண்டாய் இருந்து ஒரே காட்சியைக் காணுகிறாயே
நன்றாக அது இருந்திடக் கூடாதோ

ஏன் எதற்கு எப்படி யார் என்று கேட்டு பழகியவாய் ஊமையாய் இருந்துவிடு என்றாலும் ஏனோ
உள்ளமது ஏற்க மறுத்து தவித்து
உடனே கேட்டு விட்டே நிறுத்துகிறது வார்த்தையின்றி தவிக்காதே வருவதைக்
கையாள
துணிந்து நில் துடித்து எழு
அறிவும் ஏனோ அறிவுறுத்திக் கொண்டே
இருக்கிறது
கானங்களின் இனிமையை செவி ரசிக்க காற்று வழி வரும் செய்தி காதில் சேர
காதால் கேட்பவற்றை மனம் அசைபோட கேட்டவை பொய்யோ மெய்யோ ஐயோ புரளிகள் எல்லாம் என் காதுகளைச் சேராது புறம்தள்ளிப் போய்விடக்கூடாதோ எனத்
துடிக்க
பதறி துடித்த கைகளோ காதுகளை மூடிட கேட்ட வார்த்தைகள் காற்றில்
கரைந்திடுமோ
மூன்று புலனற்று என்னை
படைத்திருந்தால்
பாவங்களைப் பார்த்து பதறிட வேண்டாமே கண்டதைக் கேட்டு கலங்கிட வேண்டாமே பேசிப்பேசி பிறரை வெறுத்திட வேண்டாமே ஊனமுள்ள மனம் படைத்தோர் முன்பு என்னை ஊனமற்ற மனிதராய் ஏன்
படைத்தாய்
நித்தமும் செத்து செத்துப் பிழைத்திடும் நிலை என்னை வந்து சேர்ந்திடவோ
ஏன் படைத்தாய் என்னை இவ்வுலகில்?..

👁 22 வாசிப்பு ☰ 22 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.