மூன்று குரங்குகள்
எட்டி எட்டிப் பார்த்து
போவது யாரோ? என்று
கேட்ட குரங்கிடம்
அழுத்திச் சொன்னேன்
உன் தங்கையென்று
காதைக் கூர்மையாக்கி
என்ன செய்தியென்று
ஒட்டுக் கேட்ட குரங்கிடம்
அடித்துச் சொன்னேன்
அதென்ன தத்துவமாயென்று?
கண்டதையெல்லாம்
பேசிப் பேசி
வம்பிழுத்த குரங்கிடம்
அமைதியாய்ச் சொன்னேன்
அங்கே பார்!
புத்தர் சிலையென்று!
💬 கருத்துகள் (0)