சுட்டு விரல்
சுட்டுவிரல் என்பது வெறும் விரல் அல்ல,
வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி!
வானத்தை சுட்டி “அங்கே பார்” என்றால்,
அடைய வேண்டிய உயரத்தை அறியச் செய்கிறது!
அன்புடன் அழைத்து “இங்கே வா” என்றால்,
நமக்காக அறிவின் வாசலை திறக்கிறது!
கனவை நினைவாக்கியே அறிய விரல்!
தவறிய நேரத்தில் தூக்கிவிடும் விரல்!
வழிகாட்டும் ஆசானின் சுட்டுவிரல்,
நூறாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது!
சுட்டுவிரலின் பின்னால் இருக்கும் அன்பால்,
அறிவின் திசை என்றும் ஒளிர்கிறது!
தாழ்ந்த வேளையில் அறிவுரை சொல்லும் விரல்!
வெற்றி பாதையில் முன்னே நடத்தும் விரல்!
உலகம் காட்டும் விரல்கள் பல,
உயர்வைக் காட்டும் விரல் இது!
நல்ல பாதையில் வழி காட்டும் ஆசானின் சுட்டு விரல்,
வாழும் வரைக்கும் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்குமே!
💬 கருத்துகள் (0)