உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

முதல் வகுப்பு நுழையும் முன்பே சுட்டுவிரல் நீங்கள் நீட்ட,
அந்த விரலை பற்றுக பற்றுக என்று பற்றினேன் மகிழ்வோடு
கல்வி கடவுள் கலைவாணியே கை நீட்டும் தருணம் அது
கல்வி என்னும் கடலில் மூழ்கி அறிவு எனும் முத்தெடுக்க க கற்றுத்தந்த அந்த விரலை காலந்தோறும் மறப்பதில்லை
நற்பண்பு,பணிவு, நண்பர்கள், ஒற்றுமையும் காட்டினாய்,
மொட்டு விட்ட அரும்பாய் என்னை வகுப்பறையில் மலரச்செய்தாய் ,
செப்பு சிலை என்னை தங்க சிலையாய் மிடுக்குடன் மிளிரச் செய்தாய் ,
தன்னந்தனி மனிதன் என்னை ஊர் மெச்ச செய்திட்டாய் ,
உன் சுட்டு விரலுக்கு எத்தனை மகிமை!
உன் சுட்டு விரல் மட்டுமல்ல உன் சுட்டு விழி பார்வையிலே வகுப்பறையை கட்டி வைத்தாய், உன் பார்வைக்கோ எத்தனை வலிமை ! அப்போது தெரியவில்லை இப்போது தான் தெளிவுபட்டேன் . காற்றுக்கோ என்ன வேலி உன் பெருமை உலகறியும், உன் பார்வை என்னும் காந்தத்தில் என்னை நல்வழிக்கு இழுத்து விட்டாய் , தடுமாறும் சிலரைக் கூட தன் கை கொண்டு தூக்கி விட்டாய், உன் பார்வை எத்தனை மகிமை என்று அப்போது தெரியவில்லை. இன்று உணர்கின்றேன் அளப்பரிய உன் சேவை.
உன் பெருமை உலகறிய ஒரு நொடியேனும் கொடுத்துவிடு, என்னே ஒரு வியப்பு! நான் மட்டும் உயரவில்லை கனிவான உன் பார்வை கல்லையும் கரையச் செய்யும் . தாயுள்ளம் கொண்டவளே தழைத்தோங்கட்டும் உன் பெருமை ! இன்று மட்டும் நினைவு கூறவில்லை உங்களுக்கோ அனுதினமும் ஆசிரியர் தினமே! வாழ்க உன் பெருமை ! வளர்க உன்
நற்தொண்டு!

👁 18 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.