சுட்டுவிரல்
சுட்டுவிரல்
கரும்பலகையில் நான் எழுதும் போது எல்லாம்
ஒவ்வொரு பிழையையும்
சரியாகச் சுட்டிக்காட்டிய விரல்கள் அது
எழுத்துப் பிழைகளை மட்டும் அல்ல,
என் வாழ்க்கைப் பிழைகளையும்
அன்போடு சுட்டிக்காட்டிய விரல்கள்.
நான் தடுமாறிய போதெல்லாம்
தாங்கிப் பிடித்தும்
நான் துவண்ட போதெல்லாம்
தட்டிக்கொடுத்தும்
நான் முன்னேறிய போதெல்லாம்
பெருமையோடும் வாழ்த்திய விரல்கள்.
ஆசிரியராக மட்டும் இல்லாமல்,
தாயாக அரவணைத்து,
தந்தையாக வழிகாட்டி,
தோழனாகத் துணை நின்று,
என் வாழ்வின் அடித்தளமாக
எப்போதும் இருந்தவர்கள்.
என் கண்ணீருக்கு
ஆறுதலாகவும்
என் வெற்றிக்கு
காரணமாகவும் இருந்தவர்கள்,
தங்கள் துன்பங்களை மறைத்து,
மாணவர்களின் கனவுகளுக்காக
தினமும் ஓடுபவர்கள்.
என் பாதையில் நான்
தவறான திசையில் சென்றபோது
“இது பாதை அல்ல” என்று
சுட்டிக்காட்டிய அந்த விரல்
என் வாழ்க்கையின் திசைகாட்டியானது
கரும்பலகையில் எழுத்தைத்
திருத்திய அந்தச் சுட்டுவிரல்,
என் வாழ்க்கையையே
செம்மைப்படுத்திய சுட்டுவிரலானது.
விரல்கள் என்னைப் பிடித்து நடக்க கற்றுக்கொடுக்கவில்லை
தனியாக நடக்கக் கற்றுக்கொடுத்தது.
என்னை உயர்த்தவில்லை
உயர்வதற்கான
ஏணியாகத் தன்னை மாற்றிக்கொண்டது.
அதனால்தான்…
ஆசிரியர் என்பவர்
பாடம் கற்பிப்பவர் மட்டும் அல்ல
வாழ்க்கையைப் படிக்கக் கற்றுதரும் விரல்கள் ஆய் இன!
என் வெற்றியின் பின்னால்
மறைந்திருக்கும் அந்த விரல்களுக்கு
என்றென்றும் நான் கடமைபடுவன்
ஏனெனில்,
என் வாழ்க்கையின் ஒவ்வொரு
சரியான பாதையையும்
சுட்டிக்காட்டியது
பல ஆசிரியர்களின்
“சுட்டுவிரல்கள் தான்”!
உலகில் உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்…❤️
💬 கருத்துகள் (0)