உலகின் உயர்ந்த சக்தி
அம்மா என்றாலே அழகு,
அன்பின் உருவம்,
தியாகத்தின் மறுபெயர் ஆவாள்.
தனக்கென்று ஓர் ஆசை
தனக்கென்று ஓர் உலகம்
தனக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தும்,
அவற்றைத் துறந்து
குடும்பத்திற்காகவே வாழ்பவள்.
எல்லோராலும் போற்றப்படுபவள்
சில நேரங்களில்
எல்லோராலும் அவமானப்படுத்தப்
படுபவள்
ஆனாலும் அன்பை மட்டும்
அவள் ஒருபோதும் கைவிடுவதில்லை.
தன் குருதியையே பாலாக்கி,
பிள்ளையின் பசியைத் தீர்ப்பவள்;
தன் தூக்கத்தைத் தியாகம் செய்து,
பிள்ளையின் கனவுகளைக் காப்பவள்.
“அம்மாவின் ஆசை என்ன?”
என்று யாரும் கேட்பதில்லை;
ஆனால் நம் ஆசைகள் ஒவ்வொன்றிற்காகவும்
அவள் ஓடிக்கொண்டே இருப்பவள்
குடும்பமே உலகம் என்று வாழ்பவள்
குடும்பத்தின் மகிழ்ச்சியே
அவளது மகிழ்ச்சி என்று இருப்பவள்
தன் வலியை மறைத்து
நம் சிரிப்பை ரசிப்பவள்;
தன் கனவுகளை மறந்து
நம் கனவுகளுக்கு சிறகளிப்பவள்.
உலகில் ஆயிரம் சக்திகள் இருந்தாலும்,
அவற்றை எல்லாம் வெல்லும்
ஒரே மாபெரும் சக்தி
அம்மாவின் அன்பு தான்
என் வாழ்வில் கடவுள் கொடுத்த அன்பின் வடிவமும்
வாழ்க்கை முழுவதும் துணை நிற்கும் நிழலும்
அம்மா தான்
என்றென்றும் அழியாத ஒரே உருவம் அம்மாவின் முகம் மட்டுமே! ❤️
💬 கருத்துகள் (0)