உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

ஞாயிறு சுட்டியது…
நில மகளின் பசுமையை!
நில மகள் சுட்டினால்…
வாரி வழங்கிய வானத்தை!
வான் சுட்டியது…
ஆழ்கடல் கொடைவளத்தை!
சுட்டுவது தன்னையல்ல
தந்த நல் கொடைகளையே!
பெறுவதும் தனக்காக அல்ல…
தாரகம் தழைக்கவே!
தந்தையும்… தாயும்…
அப்படித்தான்…
கொடுப்பது அவர் கொடைத்தன்மை…
சுட்டுவது…
என் பெருமை…

👁 10 வாசிப்பு ☰ 15 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மயோன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.